என் இனிய விவாகரத்தே 3

Divorce 3

என் இனிய விவாகரத்தே 3

3 என் இனிய விவாகரத்தே!! 

சென்னையில் சந்தடி நிறைந்த தெரு அஃது

"அண்ணன் ஸ்விக்கில இருந்து ஆர்டர் வந்திருக்கு" என்ற குரல் கேட்டு வேலைக்கு அவசர அவசரமாக கிளம்பி கொண்டு நின்ற அந்த நெடிய உயர்த்து ஆடவன் கழட்டி வைய்த கண்ணாடியை கண்ணில் மாட்டியவன்.. சட்டையை மாட்டியும் மாட்டாதும் வாசல் நோக்கி ஓடி வந்தான் ....

"என்ன ஆர்டர் தம்பி....

"இட்லியும் பூரியும் மேடம் ஆர்டர் போட்டு இருக்காங்க" என்றதும் பெருமூச்சு விட்டவன் பாக்கெட் தடவி காசை கொடுத்து உணவை வாங்கி மேஜை மீது வைத்தவன் மெல்ல தலையை தூக்கி ஹாலில் கிடந்த தன் திருமண போட்டோவை பார்த்தான் .. 

மாநிறத்து கண்ணாடி அணிந்த குறையில்லாத களையான ஆண் ஸ்ரீநாத்!!!

அவன் அருகே மிடுக்காக பகட்டாக இருந்தது அவன் மனைவி ரஞ்சனி!! திருமணம் முடிந்து மூன்று வருடம் ஆகிறது ... ரெண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு ... 

ஸ்ரீ ஏழை குடும்ப பிண்ணனி கொண்டவன், எப்படியோ தக்கி முக்கி டிகிரி படித்து முடித்து காலேஜ் ஒன்றில் ஆபிஸூக்குள் வேலை பார்க்கிறான்...மாதம் ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் சிக்கனமாக வாழ்க்கை நடத்த போதுமான சம்பாத்தியம் ... தப்பான பழக்க வழக்கம் இல்லை எனவே சம்பாதிக்கும் அனைத்தும் தாராளமாக போதுமானதாக இருந்தது திருமணத்துக்கு முன்பு வரை .... திருமணம் முடிந்த பிறகே தெரிந்தது ரஞ்சனி ஊதாரி பேர்வழி என்று ... பக்கத்து வீட்டு பெண் சேலை எடுத்தால் இவளும் எடுப்பாள் ...கவரிங் நகையாக வாங்கி குவிப்பாள், தினம் ஒரு சேலை நைட்டி என்று ஆடம்பரம் குறைவில்லாது இருக்கும் ... 

"படத்துக்கு போறாங்க காசு கொடுங்க , ஷாப்பிங் போறாங்க காசு கொடுங்க ஆன்லைன் ஷாப்பிங் காசு கொடுங்க" அவன் ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்டால் இது கூட எனக்கு செய்ய முடியாதா எப்பவும் பஞ்ச பாட்டு பாடுங்க, மனைவிக்கு செய்ய முடியலைன்னா எதுக்கு கல்யாணம் பண்றீங்க? என்று உச்ச தொனியில் வாயை கிழிப்பாள் ஸ்ரீநாத் தாய் இருந்த வரை அவரோடு தினமும் சண்டை அது பாவம் இவ தொல்லை தாங்க முடியாதே போய் சேர்ந்து விட இவன் வசமாக மாட்டி கொண்டான்... 

"இப்ப என்ன பேசிட்டேன்னு சண்டை போடுற நம்ம நிலமை தெரிஞ்சு நடத்துக்க ரஞ்சனி.."

"நான் பத்து ரூபாய் கிளிப் வாங்குறதுல தியாகம் பண்றதுலதான் நீங்க கோடிஸ்வரன் ஆகிட போறீங்களா? ..

"அப்படி சொல்லல ரஞ்சனி சிறுதுளி பெரு வெள்ளம்

"ப்ச் பிச்சைக்காரனுக்கு வாக்கப்பட்டு நிதமும் பிச்சை எடுக்க வேண்டியது இருக்கு என்று காலை தொடங்கும் சண்டை இரவு வரை போகும்..வீட்டு சத்தம் வெளியே போகாது எப்படியோ சமாளிப்பான்.... அவள் ஒன்றும் பணக்கார வீட்டு பெண்ணும் இல்லை.. இவனை விட வசதியில் குறைந்த பெண்ணைதான் திருமணம் செய்தான் அவளோ காலை கீழே வைத்தால் பார் என்று வானத்தில் பறக்க ஆசை கொண்டாள்...  

"குழந்தை பசிக்கு அழுது ரஞ்சனி கொஞ்சம் ஏன்னு பாரேன்.... 

"ப்ச் அது நொய் நொய்னு எப்பவும் அழத்தான் செய்யுது .... எனக்கு தூக்கம் வருது" என்று திரும்பி படுத்து கொள்வாள்.... இவன்தான் பிள்ளையை தோளில் போட்டு தூங்க வைத்து விட்டு காலை தூங்கியும் தூங்காதும் வேலைக்கு ஓடுவான்... வரும் இருபதாயிரம் சம்பளமும் போன இடம் தெரியாது போகிறது... மாத கடைசியில் கையில் கிடக்கும் ஒற்றை மோதிரம் தான் ஆபத்தாண்டவன் பேங்குக்கு போவதும் வருவதும் என்று அவனை காப்பாற்றும் ... 

அவளை அடிக்க ஒரு நொடி ஆகாது 

என் மேல கை வச்சிங்க தூக்கு போட்டு செத்திடுவேன் என்று மிரட்டும் அவளிடம் அளவாகவே பேச்சு வைத்து கொள்வான்... தாய் இறக்கும் வரை அளவாக ஆடிய பேய் அவன் தாய் இறந்த பிறகு இஷ்டம் போல வாழ ஆசை கொண்டு தறிகெட்டு சுற்றுகிறாள்..

ரஞ்சனி என்ன ட்ரெஸ் இது ? மேக்கப் கூடியது, ஆடை குறைந்தது ... கேள்வி கேட்காது இருக்க முடியவில்லை 

ஏன் போட்டா என்ன தப்பு ?

"தப்புன்னு சொல்லலை தீடீர்னு ஏன் இந்த மாற்றம்?? 

"பிடிச்சிருக்கு அதான் இந்த மாற்றம்" போனில் முழு நேரமும் கண் இருக்க எப்போதாவது நடக்கும் தாம்பத்தியம் மொத்தமாக தடை பட்டது 

ப்ச் மூட் இல்ல என்று தனியே போய் படுத்தாள், குழந்தையை தாய் வீட்டில் போட்டு விட்டு பிரெண்ட் வீட்டுக்கு போனேன், கடைக்கு போனேன் என்று கதை அளந்தாள்... அவளுக்கு உபதேசமும் சொல்ல முடியவில்லை அவள் செய்வதை பொறுத்து கொள்ளவும் முடியாது, 

என்ன செய்ய கட்டி தொலைச்சாச்சு மெளனமாக வாழ்ந்து பழகிடுவோம் என்று ஸ்ரீநாத் தினம் தினம் வாழ பழகுகிறான்....

மணி பத்து இன்னும் ரஞ்சனி படுக்கை விட்டு எழ வில்லை .... 

ரஞ்சனி இஇஇஇஇ என்று சற்று கடினமாகவே குரல் கொடுத்தான் 

ப்ச் என்ன, எதுக்கு கத்துறீங்க? என்று கையில்லாத நைட்டியில் ரஞ்சனி எழும்பி வந்தாள் 

என்ன இது ?என்று சாப்பாட்டை காட்டினான்....

என்னதுன்னா சாப்பாடு ஏன் கண்ணுக்கு தெரியல 

"என் கண்ணுக்கு நல்லா தெரியுது., இந்த நாலு இட்லியை ஸ்விக்கில ஆர்டர் போட்டு தான் திங்கணுமா? வீட்டுல செஞ்சா 40 ரூபாயில முடிஞ்சுடும்... அட்லீஸ்ட் கடையில வாங்கி தின்னா கூட 50 ரூபாயில் முடிஞ்சிடும்... 150 ரூபாய் ... ஏன் இப்படி பண்ற ரஞ்சனி ஆற்றாமையில் ரஞ்சினியை பார்க்க..  

ஏன்னா இந்த இட்லி சட்னி தான் நல்லா இருக்கு அது சரி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை 

"நான் கழுதையாவே இருந்துட்டு போறேன் ரஞ்சனி. ஆனா நீ ஒன்னும் அரண்மனையில் இருந்து வந்தவ கிடையாது... நீயும் சாதாரண குடும்பத்தில இருந்து என்னை கட்டிக்கிட்டு வந்தவதான்...

"இப்ப என்ன செய்ய சொல்றீங்க... நான் பிச்சைக்காரின்னு சொல்லாம சொல்றீங்களா? நாலு இட்லி வாங்கி கொடுக்க வக்கு இல்லாத உங்களுக்கு எதுக்கு குழந்தை, குட்டி காலையிலேயே இவளை என்ன சொல்லி திட்டலாம்னு கங்கணம் கட்டிக்கிட்டு எழும்புவீங்களோ? 

" நாலு இட்லி எனக்கு பிரச்சனை இல்ல ரஞ்சனி. 

நீ பண்றது தான் எனக்கு பிரச்சனையா இருக்கு குழந்தையை கொண்டு போய் முழுக்க உங்க அம்மா வீட்டுல போட்டுடுற, அது சாப்பிட்டுச்சா தூங்கிச்சான்னு கூட பார்க்க மாட்டேங்கிற ...அப்படி என்ன சோம்பேறிதனம் ...

"ஏன் புள்ளை பெற்க நீங்களும்தான காரணம் பொண்ணு தான் பிள்ளளையை பார்க்கணுமா ஆம்பள பார்த்தா ஆகாதா ? 

"என் பிள்ளையை பார்க்க எனக்கு என்ன கஷ்டம் நான் பிள்ளையை பார்த்தா வேலைக்கு எவன் போவான் காசு யார் சம்பாதிக்க 

"ஆமா கோடி சம்பாதிச்சு கொட்டிட்டார் பேசுறார் பேச்சு , அதெல்லாம் புள்ள பெத்த எனக்கு அக்கறை இருக்கு நீங்க மட்டும் தான் பிள்ளை மேல அக்கறை இருக்கிற மாதிரி குதிக்காதீங்க... இந்த நாலு இட்லி தானே பிரச்சனை போங்க நீங்களே வச்சுக்கோங்க என்று ரஞ்சனி அந்த நாலு இட்லியை தூக்கி அவன் முகத்தில் வீச ... சாம்பார் சட்னி அத்தனையும் ஸ்ரீநாத் சட்டை முழுவதும் பட இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் அடிப்பதற்கு கை ஓங்கி விட்டான் ... 

"ஓ அடிக்கிற அளவுக்கு வந்துட்டீங்களா? நான் கோபப்பட்டா உங்க மேல எவ்வளவு கோபப்படலாம் பக்கத்து வீட்டுக்காரி பிறந்த நாளைக்கு அவ புருஷன் வருஷம் வருஷம் நகை எடுத்து கொடுக்கிறான் நீங்க என்னைக்காவது ஒரு குண்டுமணி நகை எடுத்து தந்திருக்கிங்களா? 

எப்படி எடுத்து தர முடியும் ? 

அதான் கொண்டு வந்து கொடுக்கிற சம்பள பணத்தை எல்லாம் மேக்கப் பொருளுக்கும், இப்படி ஆடம்பர தேவைக்கும் செலவழிச்சா நகை மயித்துக்குள்ளதான் வாங்க முடியும்...

"சரி சாமி நகை எடுத்து தர வேண்டாம் இந்த ஓட்டை வீட்ல இருந்து ஒரு நல்ல வீட்டுக்காவது வாடகைக்கு கூட்டிட்டு போகலாம்ல 

"ஏன் இந்த வீட்டுக்கு உனக்கு என்ன குறைச்சல் ரெண்டு பெட் ரூம் இருக்கு ஒரு ஹால் இருக்கு போதாது...

"எனக்கு போதலையே

"உன் பெருத்த வயிறுக்கு எதுவும் போதாது ,அதுக்காக நான் எதுவும் செய்ய முடியாது....

"பொண்டாட்டி ஆசை பட்டதெல்லாம் செய்ய முடியலன்னா கல்யாணம் பண்ணாம இருந்து இருக்கணும் ... கல்யாணம் பண்ணுனா அவளுக்கு என்ன பிடிக்குமோ அப்படி வாழ பழகணும்... வாழ பழகலையா , அவ எப்படி இருக்காளோ அப்படியே விட்டுட்டு , சும்மா இருக்கணும் சும்மா கத்த வேண்டியது உங்களால தான் எதையும் கிழிக்க முடியலல்ல... பின்ன எதுக்கு கத்திக்கிட்டு இருக்கீங்க போயி வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க, வந்துட்டாரு நம்மள குத்தம் சொல்ல என்று ரஞ்சனி திட்டிக்கொண்டே குளியல் அறை போய் புகுந்து கொள்ள ... 

ஸ்ரீநாத் அப்படியே இருக்கையில் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தவனுக்கு இந்த தலைவலியிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஒரு பக்க ஏக்கம்... இவள் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தவிப்பு, மரணம் ஒன்றுதான் எனக்கு விடுதலையோ ? என்ற பயம் சில நேரங்களில் வலி தாங்க முடியாமல் அவன் கண்ணில் ஓரம் பூக்கும் அதிசய கண்ணீர் துளிகள் இன்றும் மெல்ல எட்டிப் பார்த்தது, தன் கையால் கண்களை துடைத்தான் ... 

நான் தான் அவளுக்கு ஏற்ற கணவனாக இல்லையா, இல்லை அவள் நான் எதிர்பார்க்கும் மனைவியாக இல்லையா ஏன் இந்த முரண்பாடு என்று புரியாது தினம் தினம் ளெனமாக கண்ணீர் வடிக்கும் கோடி ஆண்களில் அவனும் ஒருவன் !!

ஆணின் கண்ணீருக்கு பெண்ணின் கண்ணீரை விட வலி அதிகம் ... 

சரி மாறுவாள் என்று வாழ்ந்தவன் தலையில் இடியே விழுந்தது அன்றைய இரவு .... இரவு நல்ல தூக்கத்தில் இருந்தவன் , ஏதோ ரஞ்சனி கிசுகிசுப்பாக பேசும் சத்தம் கேட்டு ஸ்ரீநாத் கண்களை திறக்க ..

அவர் இருக்கார் பிறகு பேசுறேன் ப்ளீஸ் என்ற மனைவி குரல் அது ... போனில் யாரோடோ பேசுவது போல இருந்தது....

காலையில அவர் வேலைக்கு போனதும் போன் போடுறேன் அறையின் ஓரத்தில் நின்று போனை பேசி கொண்டிருந்தாள் மணி இரவு இரண்டு 

ம்ம் 

லவ்யூ ஊஊ இச் இச் என்ற பேச்சில் சர்வமும் நாசம் ஆகி ஸ்ரீநாத்துக்கு கடலும் மலையும் பூமியும் ரெண்டாக பிளந்தது ...

மனைவியை ஒருநாள் கூட சந்தேகம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை .. அவனுக்கு தெரியாமல் அதுவும் இந்த நடு இரவில் ஒரு ஆணோடு பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது .. அதுவும் இவ்வளவு அந்தரங்கமாய் அவள் சொன்ன ஐ லவ் யூ வில் அத்தனையும் புரிந்துவிட படுக்கையில் உயிருள்ள பிணமாக கிடந்த ஸ்ரீநாத் கண்கள் சுவரை வெறித்தது

அவள் பேராசைக்காரிதான், பிழை இல்லை கணவனின் பொருளில் பேராசைப்படலாமே, அவள் பகட்டு பேச்சுக்காரித்தான் தவறில்லையே, கணவனிடம் பகட்டாய் பேச அத்தனை உரிமை உள்ளவள்தானே ... அவள் திமிரானவள்தான் இருந்து விட்டுப் போகட்டும் , அவன் தாழ்ந்து போவதில் தவறில்லையே , அவள் அவனைப் புரிந்து கொண்டது கிடையாது, இருவரும் புரிதலோடு தான் வாழ வேண்டும் என்று அவசியம் இல்லையே, பல விட்டுக்கொடுப்புகளும் வாழ்க்கையை ஒட்டி விடுமே என்றுதான் இத்தனை நாளும் அவளை புரிந்து கொள்ள முயற்சி செய்து விட்டுக்கொடுக்க முயற்சி செய்து , அவளை வாழ வைத்து இவன் வாழாமல் செத்தது... ஆனால், அவன் செய்த அத்தனை தியாகங்களுக்கும் அவள் கொடுத்தது துரோகம் என்ற மரணமாலை அல்லவா??

இந்த உறவுக்கு இதற்கு மேல் கொச்சைப்படுத்த அவளால் முடியுமா?? அவன் அருகே வந்து சத்தமில்லாமல் படுத்துக்கொண்ட ரஞ்சனியின் மீது இன்னும் ஒரு துளி நம்பிக்கை மட்டும் மிச்சம் இருந்தது ...

"என் மனைவி தப்பு செய்திருக்க மாட்டாள் எங்கள் உறவு தோற்றுப் போகாது, நான் கட்டிய தாலி எனக்கு துரோகம் செய்யாது, அந்த புனித பந்தத்தை நான் மதிப்பது போல, என் மனைவியும் மதிப்பாள் ... அவளை தவறாக நினைப்பதே தவறு என்று ஸ்ரீநாத் பலவாறு தன்னை சமாதானம் செய்து கொண்டு, மனைவி தூங்கும் வரை காத்திருந்தவன் ரஞ்சனி தூங்கிய பிறகு மெல்ல அவள் போனை எடுத்து ஆன் செய்துப் பார்த்தான் ... அது கைரேகை பாஸ்வேர்ட் கேட்டது அவள் கைகளைப் பிடித்து அசைவு இல்லாமல் போனில் தொடுதிரையில் ரேகையை பதிவு செய்தவன் போன் மட்டுமா விரிந்தது.. அவள் ரகசியமாய் வளர்த்து வைத்திருந்த கள்ளக்காதலில் லீலைகளும் அல்லவா விரிந்தது...

ஐயையோ !!பார்க்க முடியவில்லை, அவர்கள் பேசுவதை கேட்க முடியவில்லை, அவர்களின் காதலை ரசிக்க முடியவில்லை...

ஆஆஆஆஆஆஆ சத்தமில்லாது வாயை பொத்தி கொண்டு ஸ்ரீநாத் அலறினான் வலி வலி வாள் கொண்டு கிழித்த வலி அது 

ஏமாந்தவன் வலி 

துரோகத்தின் வலி 

பிறர் பிழைக்கு மரண வலி அவனுக்கா?? 

அம்மா முடியலையே நான் இவளுக்கு எதில் குறை வைத்தேன் என்று இப்படி ஒரு துரோகத்தை எனக்கு பரிசாக தந்து விட்டாள்.... கோபம், பதட்டம், பயம் கால் கை கிடுகிடுவென ஆடியது .. 

என்ன ஏமாற்றின நீ உயிரோடு இருக்கவே கூடாது உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போறேன் என்று ஒருநொடி மூளை தாறுமாறாக எகிற, சட்டென அங்கிருந்த கத்தியை எடுத்து ரஞ்சனி கழுத்தை நரநரவென்று அறுத்தான் ... ரத்தம் அவன் முகத்தில் சீத் சீத் என்று அடித்தது 

துரோகம் செய்தது யாரோ 

வாழ்க்கை இழந்து நிற்பது யாரோ!!?

என்னே ஒரு கடவுளின் ஓரவஞ்சனை தீர்ப்பு இது !!

பெண்கள் எல்லாரும் தேவதையும் இல்லை.. ஆண்கள் எல்லாரும் அரக்கர்களும் இல்லை.. பெண்ணிலும் பேய் உண்டு , ஆணிலும் தேவதாக்கள் உண்டு ..